இந்தியாவிடம் அடி பணிந்தது ஆஸ்திரேலியா!

உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில், இந்திய அணி, 36 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியின் இன்றைய ஆட்டத்தில், இந்திய அணி, முதலில் பேட்டிங் செய்து, 352 ரன்கள் எடுத்தது. 353 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்கை துரத்தி இரண்டாவதாக பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி, 50 வது ஓவரில், அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து, 316 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதையடுத்து, இந்திய அணி, 36 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில், பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்தியா – ஆஸ்திரேலியா இடையாலான போட்டியில், இந்திய அணி வெற்றி பெற்றது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Sharing is caring!