இந்தியாவுக்கு அடுத்த தங்கம்… சவுரப் சவுத்ரி அசத்தல்

புதுடில்லி:
அடுத்த தங்கம்… இந்திய வீரர் சவுரப் சவுத்ரி தங்கம் வென்று சாதித்துள்ளார்.

உலக கோப்பை துப்பாக்கி சுடுதலில் இந்திய வீரர் சவுரப் சவுத்ரி தங்கம் வென்றார். டில்லியில் உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி நடக்கிறது. இதன் ஆண்களுக்கான 10 மீ., ‘ஏர் பிஸ்டல்’ பிரிவு தகுதிச்சுற்றில் இந்தியா சார்பில் சவுரப் சவுத்ரி, அபிஷேக் வர்மா, ரவிந்தர் சிங் பங்கேற்றனர்.

சவுரப் சவுத்ரி பைனலுக்கு முன்னேறினார். அபிஷேக், ரவிந்தர் முறையே 24, 26வது இடம் பிடித்தனர். பைனலிலும் சவுரப் நம்பிக்கை அளித்தார். மொத்தம் 245 புள்ளிகள் குவித்த இவர் தங்கத்தை தனதாக்கினார்.

இதன் மூலம், உலக சாதனையையும் எட்டினார். வெள்ளி, வெண்கலம் முறையே டாமிர், சீனாவின் பாங் வெய் கைப்பற்றினர். இத்தொடரில் இந்தியாவுக்கு கிடைத்த தங்கத்தின் எண்ணிக்கை இரண்டாக உயர்ந்தது. ஏற்கனவே, 10 மீ., ‘ஏர் ரைபிள்’ பிரிவில் சண்டேலா தங்கம் வென்றிருந்தார்.

நன்றி: பத்மா மகன், திருச்சி.

Sharing is caring!