இந்தியாவுக்கு எதிரான 4வது டெஸ்டிலிருந்து அவுஸ்திரேலிய நட்சத்திர வீரர் விலகல்!

பிரிஸ்பேனில் தொடங்கவுள்ள இந்தியாவுக்கு எதிரான 4வது டெஸ்ட் போட்டியிலிருந்து அவுஸ்திரேலியா அணியின் ஆரம்ப துடுப்பாட்டகாரரான Will Pucovski விலகியுள்ளார்.

4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 3 போட்டிகள் முடிவடைந்துள்ள நிலையில் 1-1 என்ற வெற்றி கணக்கில் தொடர் சமனில் உள்ளது. சிட்னியில் நடைபெற்ற 3வது டெஸ்ட் டிராவில் முடிந்தது குறிப்பிடத்தக்கது.

இந்திாயவுக்கு எதிரான முதல் மற்றும் இரண்டாவது டெஸ்டில் அவுஸ்திரேலியாவின் பிளேயிங் லெவனில் இடம்பெறாத Will Pucovski, சிட்னி டெஸ்டில் இடம்பிடித்து ஆரம்ப துடுப்பாட்டகாரராக களமிறங்கினார்.

முதல் இன்னிங்ஸில் 62 மற்றும் 2வது இன்னிங்ஸில் 10 ஓட்டங்களில் அவுட்டானார். சிட்னி டெஸ்டில் இறுதி நாள் களதடுப்பின் போது Will Pucovski-க்கு தோள்பட்டையில் காயம் ஏற்பட்டது.

இதனையடுத்து, ஜனவரி 14ம் திகதி நடந்த உடற்தகுதி தேர்வில் Will Pucovski தேர்ச்சி பெறவில்லை.

இதன் காரணமாக அவர் இந்தியாவுக்கு எதிரான கடைசி மற்றும் 4வது டெஸ்டிலிருந்து விலகினார். அவருக்கு பதிலாக Marcus Harris அவுஸ்திரேலியா அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

Sharing is caring!