இந்தியாவுக்கு கிடைத்த வெள்ளிப்பதக்கம் தங்கம் ஆகுமா?

ஜகார்த்தா:
தவறு நடந்தது உண்மை என்றால் தொடர் ஓட்டம் போட்டியில் இந்தியாவுக்கு தங்கம் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது.

ஆசிய தடகளத்தில் கலப்பு 4*400 மீ., தொடர் ஓட்டம் நேற்று நடந்தது. இந்தியா சார்பில் முதலில் முகமது அனாஸ் துவக்கினார். அடுத்து பூவம்மா, ஹிமா தாஸ் ஓடினர். கடைசியாக தமிழகத்தின் திருச்சி வீரர் ஆரோக்கிய ராஜிவ் சற்று வேகம் எடுக்க இந்தியாவுக்கு வெள்ளிப்பதக்கம் (3 நிமிடம், 15.71 வினாடி) கிடைத்தது. இரண்டாவதாக ஓடிவந்த பூவம்மாவிடம் இருந்து ‘பேடனை’ பெற்றார்
ஹிமா தாஸ்.

இவர் ஓடத் துவங்கிய போது, முன்னால் சென்ற பஹ்ரைனின் ஆப்ரிக்க வீராங்கனை சல்வா நாசர், ஹிமா காலில் இடித்ததாக புகார் கூறப்பட்டது. இதை ஆசிய கூட்டமைப்பு விசாரிக்கிறது. தவறு நடந்தது உறுதி எனில் இந்தியாவுக்கு தங்கம் கிடைக்கலாம்.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!