இந்தியாவுடனான டி20 தொடரை நடத்தும் வெஸ்ட் இண்டீஸ்

இங்கிலாந்தில் நடைபெற இருக்கும் 2019 உலக கோப்பையை மனதில் கொண்டு, இந்தியாவுடனான இரண்டு போட்டிகள் கொண்ட டி20 தொடரை நடத்துகிறது வெஸ்ட் இண்டீஸ்.

புளோரிடாவின் லாடெர்ஹிலில், இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் இரண்டு போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெற இருக்கிறது. 2019 உலக கோப்பையை மனதில் கொண்டு வெஸ்ட் இண்டீஸ் இத்தொடரை நடத்த உள்ளது. 2016ம் ஆண்டு இரு அணிகளுக்கு இடையேயான இரு போட்டிகள் கொண்ட டி20 தொடர் இதே இடத்தில் நடைபெற்றது. அப்போது முதல் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் பரபரப்பான வெற்றியை பதிவு செய்தது. இரண்டாவது போட்டி மழை காரணமாக கைவிடப்பட்டதால், வெஸ்ட் இண்டீஸ் கோப்பையை கைப்பற்றியது.

அடுத்த ஆண்டு நடக்க இருக்கும் இத்தொடர், கிரிக்கெட் வெஸ்ட் வெஸ்ட்டின் நீண்ட கால திட்டங்களில் ஒன்றாகும். 2022ம் ஆண்டு வரை அமெரிக்காவில் ஒவ்வொரு ஆண்டும் அதிகபட்சமாக இரண்டு டி20 போட்டிகளில் விளையாட வேண்டும் என்பதே வெஸ்ட் இண்டீசின் திட்டமாகும்.

Sharing is caring!