‘இந்தியாவுடன் விளையாடுவதை வெறுக்கிறேன்’ புலம்பும் அவுஸ்திரேலிய வீராங்கனை

இந்தியாவுக்கு எதிராக விளையாடுவதை தான் வெறுப்பதாக அவுஸ்திரேலிய பந்து வீச்சாளர் மேகன் ஸ்கட் கூறியுள்ளார்.

எதிர்வரும் மார்ச் 8ம் மெல்போர்ன் நகரில் நடக்கும் ஐசிசி மகளிர் டி-20 உலகக் கோப்பையின் இறுதிப்போட்டியில் இந்தியா-அவுஸ்திரேலிய அணிகள் மோதவுள்ளன.

இந்நிலையில், இந்தியாவுக்கு எதிரான விளையாடுவதை தான் வெறுப்பதாகவும், இந்தியாவின் ஆரம்ப துடுப்பாட்டகாரர்கள் ஷபாலி வர்மா மற்றும் ஸ்மிருதி மந்தனா, தன்னை எவ்வாறு எதிர்கொள்ள வேண்டும் என நன்கு அறிந்தவர்கள்.

முத்தரப்பு தொடரில் ஷபாலி வர்மான விளாசிய சிக்ஸர், எனது பந்தில் அடிக்கப்பட்ட பெரிய சிக்ஸராகும்.

இந்த ஜோடி எனது பந்தை சுலபமாக விளையாடுவார்கள் என்பதால் பவர்பிளே-யில் பந்து வீசுவது சிரமமாக இருக்கும். இந்த ஜோடி விளையாடினால் நான் பவர்பிளே-யில் பந்து வீசுவது சிறப்பாக அமையாது.

பந்துவீச்சாளர்களாக உண்மையில் சில திட்டங்களை நாங்கள் வகுத்துள்ளோம் என தெரிவித்துள்ளார்.

Sharing is caring!