இந்தியா – ஆஸி. இடையிலான சர்வதேச ஒருநாள் போட்டி

இந்திய மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான முதலாவது சர்வதேச ஒருநாள் போட்டி இன்று (14) நடைபெறவுள்ளது.

மும்பை வன்கடே மைதானத்தில் நடைபெறவுள்ள இந்தப் போட்டி இலங்கை நேரப்படி இன்று பிற்பகல் 1.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.

கடந்த வருடம் நிறைவுக்கு வந்த உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரின் பின்னர் அவுஸ்திரேலியா விளையாடவுள்ள முதலாவது ஒருநாள் தொடராக இது அமையவுள்ளது.

இந்தியாவும் அவுஸ்திரேலியாவும் இதுவரையில் 142 சர்வதேச ஒருநாள் போட்டிகளில் மோதியுள்ளன.

அதில் அவுஸ்திரேலியா 77 போட்டிகளிலும் இந்தியா 50 போட்டிகளிலும் வெற்றியீட்டியுள்ளன.

கடந்த வருடம் இந்திய மண்ணில் நடைபெற்ற ஒருநாள் தொடரை 3 – 2 என்ற கணக்கில் அவுஸ்திரேலியா கைப்பற்றியிருந்தது.

இந்தத் தொடரில் அவுஸ்திரேலியாவின் முன்னாள் அணித்தலைவர் ஸ்டீவன் ஸ்மித்தும் முன்னாள் உபதலைவர் டேவிட் வோர்னரும் தடை காரணமாக விளையாடவில்லை.

சர்வதேச ஒருநாள் அரங்கில் 100 விக்கெட்கள் மைல்கல்லை எட்டுவதற்கு அவுஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் பெட் கம்மிங்ஸுக்கு மேலும் 4 விக்கெட்கள் தேவைப்படுகின்றன.

Sharing is caring!