இந்தியா-தென்னாப்பிரிக்கா இடையே மூன்றாவது டெஸ்ட் இன்று தொடக்கம்.!

இந்தியா-தென்னாப்பிரிக்கா அணிகள் இடையேயான 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரின் மூன்றாவது போட்டியானது நாளை ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் தொடங்குகிறது.

ஏற்கனவே தொடரினை 2 க்கு 0 என்ற கணக்கில் இந்திய அணி வென்று விட்ட நிலையில், இந்த போட்டி சம்பிரதாய போட்டியாகவே அமையும். இருப்பினும் இந்த போட்டியை நாங்கள் எளிதாக எடுத்துக்கொள்ள மாட்டோம் என தென்னாபிரிக்க அணியின் முன்னணி வீரர் டீன் எல்கர் தெரிவித்துள்ளார்.

முதல் டெஸ்ட் போட்டியில் மயங்க் அகர்வால், ரோஹித் சர்மா ஜோடிகளும், இரண்டாவது டெஸ்டில் கோலியும் அபாரமாக விளையாடினர். அஸ்வின், ஷமி, ஜடேஜா, உமேஷ் ஆகியோரின் வீசிய பந்துகளும் தென்னாப்பிரிக்கா திணறடித்தது.

இந்தநிலையில், கடைசி டெஸ்ட் போட்டி ராஞ்சியில் உள்ள ஜார்க்கண்ட் கிரிக்கெட் சங்க ஸ்டேடியத்தில் இன்று நடக்கவுள்ளது. இந்திய அணியில் உள்ள அனைத்து வீரர்களும் நல்ல பார்மில் உள்ளதால் இந்திய ஹாட்ரிக் வெற்றியை பெறுவதற்கு அதிக வாய்ப்பு உள்ளது.

சொந்த மண்ணில் 3 க்கு 0 என்ற கணக்கில் தென் ஆப்ரிக்காவை ஒயிட்வாஷ் செய்யும் முனைப்புடன் இந்திய அணி உள்ளது. அதே சமயம் ஒரு போட்டியிலாவது வெற்றி பெறவேண்டும் என்ற முனைப்பில்  தென் ஆப்ரிக்கா உள்ளது.

Sharing is caring!