இந்தியா – நியூசிலாந்து: இரண்டாவது ஒருநாள் போட்டி – 274 வெற்றி இலக்கு

இந்தியா – நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் நியூசிலாந்து அணி இந்தியாவிற்கு வெற்றி இலக்காக 274 நிர்ணையித்துள்ளது.

நியூசிலாந்து சுற்று பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 20 ஓவர் தொடரை 5-0 என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றி வரலாறு படைத்தது. அடுத்த 3போட்டிகள் கொண்ட ஒரு நாள் கிரிக்கெட் தொடரிலும் ஆடி வருகிறது.

முன்னதாக முதலாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி அடைந்து 0-1 என்ற கணக்கில் பின் தங்கி உள்ளது.

இரண்டாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி ஆக்லாந்தில் இன்று நடைபெற்று வருகிறது. இதில் டாஸ்க் வென்ற இந்திய அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.

முதலில், துடுப்பெடுத்தாடிய நியூசி அணி இந்தியாவுக்கு வெற்றி இலக்காக 274 ஓட்டங்கள் நிர்ணையித்துள்ளது.

தற்போது களத்தில் உள்ள இந்திய அணி, 32ஓவர்களில் 7விக்கெட் இழப்பிற்கு 157 ஓட்டங்கள் எடுத்துள்ளது. இதில், ஷ்ரேயாஷ் ஐயர் 52 ஓட்டங்கள் எடுத்து அரைசம் அடித்துள்ளார்.

தற்போது இந்திய அணியில் Shardul Thakur மற்றும் Navdeep Saini களத்தில் உள்ளனர்.

Sharing is caring!