இந்தியா பேட்டிங் சொதப்பல்.. வாரிச் சுருட்டிய ஆஸி. எதிர்பார்க்காத ட்விஸ்ட்!

இந்திய அணி இரண்டாம் நாள் முடிவில் 5 விக்கெட் இழந்த நிலையில், மூன்றாம் நாளில் விரைவாக அடுத்த 5 விக்கெட்களை இழந்து ஏமாற்றம் அளித்தது.

ஆஸ்திரேலிய அன்பிகு எதிரான நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்தியா பங்கேற்று ஆடி வருகிறது.

முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி மோசமான தோல்வியை சந்தித்த நிலையில், இரண்டாம் டெஸ்ட் போட்டியில் இந்தியா வெற்றி பெறும் நோக்கில் களமிறங்கியது.

முதல் இன்னிங்க்ஸ்

ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் செய்து 195 ரன்கள் மட்டுமே எடுத்து முதல் இன்னிங்க்ஸ்-ஐ முடித்துக் கொண்டது. அடுத்து இந்திய அணி முதல் இன்னிங்க்ஸ் பேட்டிங் ஆடியது. இந்திய அணியின் துவக்க வீரர் மயங்க் அகர்வால் டக் அவுட்டானார்.

இரண்டாம் நாள்

ஷுப்மன் கில் 45, புஜாரா 17, விஹாரி 21, பண்ட் 29 ரன்கள் எடுத்தனர். விக்கெட்கள் சரிந்த நிலையிலும் கேப்டன் ரஹானே அபாரமாக ஆடி சதம் கடந்தார். ஜடேஜா சிறப்பாக ஆடி அவருக்கு ஒத்துழைப்பு அளித்தார். இரண்டாம் நாள் முடிவில் இந்தியா 277 ரன்களுக்கு 5 விக்கெட்கள் இழந்து இருந்தது.

எதிர்பார்ப்பு

எப்படியும் 400 ரன்களை இந்தியா கடக்க முயற்சி செய்யும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால், மூன்றாம் நாள் காலையில் இந்திய அணி விரைவாக விக்கெட்களை இழக்கத் துவங்கியது. கேப்டன் ரஹானே 112 ரன்கள் எடுத்த நிலையில் வெளியேறினார்.

சரிந்த விக்கெட்

ஜடேஜா 57 ரன்களில் ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து பின்வரிசை வீரர்கள் ஒவ்வொருவராக ஆட்டமிழந்தனர். உமேஷ் யாதவ் 9, பும்ரா 0, அஸ்வின் 14 ரன்களுக்கு ஆட்டமிழந்தனர். இந்தியா 326 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது.

49 ரன்களுக்கு..

கடைசி 5 விக்கெட்களை வெறும் 49 ரன்களுக்கு இழந்தது. இந்திய அணியின் பின்வரிசை பேட்டிங் மோசமான நிலையில் இருப்பது மீண்டும் ஒரு முறை நிரூபணம் ஆனது. ஆஸ்திரேலிய அணி 131 ரன்கள் பின்தங்கிய நிலையிலும், இந்திய அணியின் விக்கெட்களை விரைவாக வீழ்த்தியதால் நம்பிக்கையுடன் இரண்டாம் இன்னிங்க்ஸ் ஆடத் துவங்கியது.

Sharing is caring!