இந்திய அணிக்காக மீண்டும் வரும் தல டோனி…!!!

இந்திய அணியின் நட்சத்திர ஆட்டக்காரரான டோனி, இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதும் மூன்றாவது ஒருநாள் போட்டியை பார்க்க வரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளதால், ரசிகர்கள் கொண்டாட்டத்தில் உள்ளனர்.

உலகக்கோப்பை தொடருக்கு பின் டோனி இந்திய அணியில் பங்கேற்காமல் ஓய்வில் இருந்து வருகிறார். டோனியை மைதானத்தில் பார்த்து பல நாட்கள் ஆகிவிட்டதால் அவரின் ரசிகர்கள் டோனி எப்போது மீண்டும் அணிக்கு வருவார் என்று ஏக்கத்துடன் சமூகவலைத்தளங்களில் டோனி, மீண்டும் வாருங்கள் என்று கூறி வருகின்றனர்.

இந்நிலையில் டோனி நாளை இந்தியா-தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதும் மூன்றாவது டெஸ்ட் போட்டி நாளை ஜார்கண்ட் தலைநகர் ராஞ்சியில் துவங்கவுள்ளது.

இதனால் இந்த போட்டியை காண்பதற்கு டோனி தனது சிறு வயது நண்பரும் ஜார்கண்ட் அணியின் முன்னாள் தலைவருமான மிஹிர் திவாகருடன் இணைந்து பார்க்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதற்காக இவர்கள் இருவரும் மும்பையில் இருந்து நாளை அதிகாலை ராஞ்சி வர உள்ளனர். இந்த தகவலை அறிந்த டோனி ரசிகர்கள் சமூகவலைத்தளங்கள் உற்சாகமான கமெண்ட்களை பதிவு செய்து வருகின்றனர்.

Sharing is caring!