இந்திய அணித்தலைவர் விராட் தொடர்ந்தும் கோஹ்லி முதலிடம்

சர்வதேச கிரிக்கெட் பேரவையின் ஒருநாள் போட்டிகளுக்கான துடுப்பாட்ட நிரல்படுத்தலில் இந்திய அணித்தலைவர் விராட் கோஹ்லி முதலிடத்தைத் தக்கவைத்துக் கொண்டுள்ளார்.

பந்துவீச்சில் இந்தியாவின் ஜஸ்பிரிட் பும்ரா முதலிடத்தில் நீடிக்கிறார்.

மேற்கிந்தியத் தீவுகள் மற்றும் இந்திய அணிகளுக்கிடையிலான சர்வதேச ஒருநாள் தொடர் முடிவுக்கு வந்ததை அடுத்து, சர்வதேச கிரிக்கெட் பேரவை புதிய நிரல்படுத்தலை வெளியிட்டுள்ளது.

சர்வதேச ஒருநாள் போட்டிகளுக்கான துடுப்பாட்ட வீரர்களில் இந்திய அணித்தலைவர் விராட் கோஹ்லி 899 புள்ளிகளுடன் முதலிடத்தைத் தக்கவைத்துள்ளார்.

மற்றொரு இந்திய துடுப்பாட்ட வீரரான ரோஹித் சர்மா இரண்டாமிடத்தைப் பெற்றுள்ளார்.

இங்கிலாந்தின் ஜோ ரூட் மூன்றாமிடத்தில் உள்ளார்.

சர்வதேச ஒருநாள் போட்டிகளுக்கான பந்து வீச்சாளர்களின் நிரல்படுத்தலில் இந்திய வீரரான ஜஸ்பிரிட் பும்ரா 841 புள்ளிகளுடன் முதலிடத்தில் நீடிக்கிறார்.

ஆப்கானிஸ்தானின் ரஷீட் கான் இரண்டாமிடத்திலும், இந்தியாவின் குல்தீப் யாதவ் மூன்றாமிடத்திலும் உள்ளனர்.

Sharing is caring!