இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளராக மீண்டும் ரவி சாஸ்திரி

இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளராக ரவி சாஸ்திரி மீண்டும் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

இன்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற நேர்காணலின் பின்னர் ரவி சாஸ்திரி மீண்டும் தெரிவான நிலையில் அவர் வரும் 2021ஆம் ஆண்டுவரை பதவி வகிக்கவுள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளராக இருந்த ரவி சாஸ்திரியின் பதவிக்காலம் முடிவடைந்ததைத் தொடர்ந்து, புதிதாக தலைமைப் பயிற்சியாளரைத் தெரிவு செய்யும் செயற்பாடு முன்னெடுக்கப்பட்டது.

இதற்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டு கபில்தேவ் தலைமையிலான தெரிவுக்குழு ஆய்வு செய்தது. இதன்படி 6 பேரின் இறுதிப் பட்டியலைத் தயாரித்து அவர்களிடம் இன்று நேர்காணலை நடத்தியது.

இறுதியில் ரவி சாஸ்திரியை மீண்டும் தலைமைப் பயிற்சியாளராக தேர்வு செய்துள்ளதாக கபில்தேவ்  அறிவித்தார்.

Sharing is caring!