இந்திய அணி பாடம் கற்பித்தது… நியூசி., கேப்டன் வேதனை

நியூசிலாந்து:
இந்திய அணி எங்களுக்குப் பாடம் கற்பித்து வருகிறது, அந்தச் சவாலை எதிர்கொள்ள மீண்டு எழுந்து நிற்க வேண்டும் என நியூசிலாந்து கேப்டன் தெரிவித்துள்ளார்.

நியூஸிலாந்தில் 10 ஆண்டுகளுக்குப் பிறகு ஒருநாள் தொடரை 3-0 என்று இந்திய அணி வென்றுள்ளது. தொடரை இழந்த விரக்தியில் நியூஸிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் கூறியதாவது:

இந்திய அணி எங்களுக்குப் பாடம் கற்பித்து வருகிறது, அந்தச் சவாலை எதிர்கொள்ள மீண்டு எழுந்து நிற்க வேண்டும். இன்று சிறு முன்னேற்றம் தெரிந்தது, ஆனால் இன்னும் சிறப்பாக ஆட வேண்டும், இன்னும் முன்னேற்றம் காட்ட வேண்டும்.

இந்தப் பிட்சில் உத்வேகம் பெற்று ஆடுவது சுலபமல்ல. ராஸ் டெய்லர் பிரமாதமாக ஆடினார். பந்து வீச்சில் சுமாராகச் செயல்படுகிறோம். ஆனால் தொடக்கத்தில் விக்கெட்டுகளை விரைவில் வீழ்த்துவது அவசியம். அடுத்த போட்டிகளில் உத்வேகத்துடன் ஆடி வெற்றி பெறுவோம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!