இந்திய அணி பேட்டிங்: தொடரை வெல்லுமா?

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான இரண்டாவது டி20 கிரிக்கெட் போட்டியில் டாஸ் வென்ற இந்தியா பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது.

அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள லாடெர்ஹில்லில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் கோலி பேட்டிங்கை தேர்வு செய்துள்ளார். 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கும், இந்த போட்டியில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றுமா? என ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர்.

இரு அணி வீரர்கள் விவரம்:

இந்தியா: தவான், ரோகித் ஷர்மா, கோலி (கேப்டன்), மணீஷ் பாண்டே, ரிஷாப் பண்ட், க்ருனால் பாண்ட்யா, ஜடேஜா, புவனேஸ்வர் குமார், வாஷிங்டன் சுந்தர், நவ்தீப் சைனி, கலீல் அகமது.

வெஸ்ட் இண்டீஸ்: சுனில் நைரேன், லீவிஸ், பூரான், ஹெட்மேயர், பொல்லார்ட், ரோவ்மன் பவல், பிரத்வெயிட் (கேப்டன்), , கீமோ பால், கேரி பிரே, காட்ரெல், தாமஸ்.

Sharing is caring!