இந்திய அணி வரலாற்றில் முதல் வெற்றி

அவுஸ்திரேலிய மண்ணில் பொக்ஸிங் டே டெஸ்ட் போட்டியொன்றில் இந்திய அணி வரலாற்றில் முதல் வெற்றியைப் பதிவுசெய்துள்ளது.

மூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்தியா 137 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது.

399 ஓட்டங்களை வெற்றியிலக்காகக் கொண்டு துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி, 261 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்களையும் இழந்தது.

இதன்படி, 4 போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி 2 – 1 என்ற கணக்கில் முன்னிலையிலுள்ளது.

இந்த வெற்றியின் மூலம் அவுஸ்திரேவியாவிற்கு எதிரான டெஸ்ட் தொடரில் 2 – 1 என்ற கணக்கில் முன்னிலையிலுள்ள ஆசிய அணியின் தலைவர் என்ற பெருமையயும் விராட் கோஹ்லி பெற்றுக் கொண்டுள்ளார்.

மெல்பேர்னில் நடைபெற்ற இந்தப் போட்டியில் முதல் இன்னிங்ஸில் இந்தியா 443 ஓட்டங்களையும் அவுஸ்திரேலியா 151 ஓட்டங்களையும் பெற்றன.

இரண்டாம் இன்னிங்சைத் தொடர்ந்த இந்திய அணி 8 விக்கெட் இழப்புக்கு 106 ஓட்டங்களைப் பெற்று ஆட்டத்தை நிறுத்திக் கொண்டது.

Sharing is caring!