இந்திய அளவிலான கைபந்தாட்ட மின்னொலி போட்டி..

கிருஷ்ணகிரி மாவட்டம் அத்திகானூரில் நடைபெற்ற அகில இந்திய அளவிலான கைபந்தாட்ட மின்னொலி போட்டி நடைப்பெற்றது.

சென்னை ஐ.சி.எப்.மற்றும் இந்தியன் வங்கி அணிகள் முதல் பரிசை வெண்றது. கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூரை அடுத்த அத்திகானூரில், கிரின் கிரேப்ஸ் கைபந்து கலகம் சார்பில் நான்காம் ஆண்டு நடைபெற்ற அகில இந்திய அளவிலான கைபந்து போட்டி மின்னொலியில் கடந்த 5-நாட்களாக நடைபெற்றது.

தமிழகம், ஆந்திரம் கேரளா ஆகிய 3 – மாநிலங்களிலிருந்து 12-க்கும் மேற்பட்ட அணிகள் பங்கேற்றன. ஆண்கள் மற்றும் பெண்கள் என இரு பிரிவில், போட்டிகள் நடைபெற்றது.

இறுதி நாளான இன்று நடைபெற்ற போட்டியில் அரையிறுதிக்கு தகுதிபெற்ற அணிகள் முழு பலத்துடன் இன்று இறுதி ஆட்டத்தில் மோதின. ஆண்கள் பிரிவில், கஸ்டம்ஸ் அணியை இந்தியன் வங்கி அணி 3- புள்ளிகள் வித்யாசத்தில் வென்று முதல் பரிசை வென்றது. இரண்டாம் பரிசை கஸ்டம்ஸ் அணி பெற்றது.

பெண்கள் பிரிவில் நடைபெற்ற இறுதி போட்டியில் சென்னை ஐ.சி.எப் அணி முதல் பரிசையும். எஸ்.ஆர்.எம் அணி – 2-வது பரிசையும் வென்றது. இறுதி நாளான இன்று போட்டியைக்காண பல ஆயிரத்திற்க்கும் மேற்பட்ட பொதுமக்கள் போட்டியை ரசித்தனர்.

கிரின் கிரேப்ஸ் அணியின் தலைவர் மோகன்குமார். செயலாளர் அசோக்குமார். பொருளாலர் சுப்ரமணி ஆகியோர் செய்திருந்தனர்.

Sharing is caring!