இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது

இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. இதில் முதல் 3 போட்டிகளில் பங்கேற்க உள்ள இந்திய அணி வீரர்கள் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது. காயம் காரணமாக வேகப்பந்துவீச்சாளர் புவனேஸ்வர் குமார் அணியில் இடம்பெறவில்லை.

இந்திய அணி: விராத் கோஹ்லி(கேப்டன்), தவான், கே.எல்.ராகுல், முரளி விஜய், புஜாரா, ரஹானே, கருண் நாயர், தினேஷ் கார்த்திக், ரிஷப் பண்ட், அஸ்வின், ஜடேஜா, குல்தீப் யாதவ், ஹார்திக் பாண்டியா, இஷாந்த் ஷர்மா, முகமது ஷமி, உமேஷ் யாதவ், பும்ரா, சர்துல் தாகூர் உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர். முன்னதாக நடைபெற்ற 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை இந்தியாவும், 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 2-1 என்ற கணக்கில் இங்கிலாந்தும் வென்றது குறிப்பிடத்தக்கது. இரு அணிகளும் மோதும் முதல் டெஸ்ட் போட்டி ஆகஸ்ட் 1 ம் தேதி தொடங்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

Sharing is caring!