இந்திய தொடருக்கு வெஸ்ட் இண்டீஸ் அணி அறிவிப்பு

இந்தியாவுடனான இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடருக்கான் வெஸ்ட் இண்டீஸ் அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

அக்டோபர் மாதம் 4ம் தேதி முதல் இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற இருக்கிறது. இந்த நிலையில், இத்தொடருக்கான 15 பேர் கொண்ட வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் டெவன் ஸ்மித் நீக்கப்பட்டு, சுனில் அம்பரீஸ் சேர்க்கப்பட்டுள்ளார்.

செப்டம்பர் 26ம் தேதி முதல் இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்யும் வெஸ்ட் இண்டீஸ் அணி, 2 டெஸ்ட், 5 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகளில் பங்கேற்க உள்ளது.

டெஸ்ட் தொடருக்கான வெஸ்ட் இண்டீஸ் அணி: ஜேசன் ஹோல்டர் (கேப்டன்), சுனில் அம்பரீஸ், தேவேந்திர பிஷூ, க்ரீக் ப்ரத்வெயிட், ரோஸ்டன் சேஸ், ஷேன் டௌரிச், ஷன்னோன் கேப்ரியல், ஜஹமர் ஹாமில்டன், ஷிமரோன், ஷாய் ஹோப், அல்சாரி ஜோசெப், கீமோ பால், கிரான் பவல், கெமர் ரோச், ஜோமேல் வாரிகன்.

Sharing is caring!