இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி… நியூசிலாந்தில் அதிரடி வெற்றி

நியூசிலாந்து:
நியூசிலாந்தில் இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியினரும் வெற்றி பெற்றுள்ளனர்.

இந்திய மகளிர் கிரிக்கெட் அணி 2 ஒருநாள் போட்டி தொடரில் பங்கேற்க நியூசிலாந்து சென்றுள்ளது. முதல் போட்டியில் நியூசி., வெற்றி பெற்றிருந்தது. இந்நிலையில் 2வது போட்டியில் டாஸ் வென்ற இந்திய கேப்டன் மிதாலி ராஜ் பீல்டிங் தேர்வு செய்தார்.

முதலில் பேட் செய்த நியூசிலாந்து மகளிர் அணி 44.2 ஓவர்களில் 161 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அதிகபட்சமாக சாட்டர்வெய்ட் 71 ரன் எடுத்தார். கோஸ்சுவாமி 3 , பூனம் யாதவ், பிஸ்த், சர்மா தலா 2 விக்கெட் எடுத்தனர். பின்னர் 162 ரன்களை இலக்காக கொண்டு இந்திய தொடக்க வீராங்கனைகள் ரோட்ரிக்ஸ், மந்தனா களமிறங்கினர்.

ரோட்ரிக்ஸ் டக் அவுட் ஆகி ஏமாற்றினார். சர்மாவும் 8 ரன்னுடன் வெளியேற 15 ரன்களுக்கு 2 விக்கெட் இழந்து இந்திய அணி தடுமாறியது. ஆனால் அதன்பின் மந்தனா- மிதாலி ராஜ் ஜோடி அசத்தலாக ஆடி ஸ்கோரை உயர்த்தினர். இருவரும் கடைசி வரை ஆட்டமிழக்காமல் 35.2 ஓவர்களில் இலக்கை எட்டினர்.

மந்தனா 90, மிதாலி ராஜ் 63 ரன்கள் எடுத்தனர். இந்தத் தொடரின் முதல் ஆட்டத்தில் மந்தனா 105 ரன்கள் எடுத்தது குறிப்பிடத்தக்கது.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!