இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் அசத்தல்….இங்கிலாந்து 89/4

மதிய உணவு இடைவெளியில் இங்கிலாந்து அணி 4 விக்கெட் இழப்பிற்கு 89 ரன் எடுத்துள்ளது. 18 ரன் பின்தங்கி இருக்கிறது.

இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. இன்றைய 3ம் நாள் ஆட்டத்தில், இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்சில் விளையாடி வருகிறது. இந்தியா முதல் இன்னிங்சில் 107 ரன்னுக்கு அவுட்டானது.

இதனை அடுத்து களமிறங்கிய இங்கிலாந்தின் அலாஸ்டர் குக் (21), ஜென்னிங்ஸ் (11) துவக்க விக்கெட்களை இஷாந்த், ஷமியிடம் பார்கொடுத்தனர். இதன் பிறகு களமிறங்கிய கேப்டன் ஜோ ரூட் (19), அறிமுக வீரர் ஒல்லி போப்புடன் (28) இணைந்து விளையாடி வந்தார். இதில் போப், ஹர்திக் பாண்டியாவிடம் எல்.பி.டபிள்யு ஆகி வெளியேறினார். தொடர்ந்து ஷமி, கேப்டன் ரூட்டை எல்.பி.டபிள்யு ஆக்கினார்.

89 ரன்னுக்கு 4 விக்கெட்கள் இழந்துள்ள இங்கிலாந்து, 18 ரன் பின்தங்கி இருக்கிறது. மதிய உணவு இடைவெளிக்கு பிறகு ஜானி பேர்ஸ்டோவ் – பட்லர் விளையாடுவார்கள்.

Sharing is caring!