இந்திய ஹாக்கி அணி கேப்டனாக ஸ்ரீஜேஷ் அறிவிக்கப்பட்டுள்ளார்.

டில்லி:
இந்திய ஹாக்கி அணி கேப்டனாக ஸ்ரீஜேஷ் அறிவிக்கப்பட்டுள்ளார்.

இந்திய ஹாக்கி அணி காமன்வெல்த் போட்டியின் மோசமான தோல்விக்குப் பிறகு, சாம்பியன்ஸ் டிராபி தனது சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்தியது. இறுதி ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணியுடன் தோல்வியுற்ற போதும் இந்திய அணியின் ஆட்டம் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பாராட்டும் படியாகவே அமைந்தது.

இந்நிலையில் ஆசிய அளவிலான ஹாக்கி போட்டி வரும் ஆகஸ்ட் மாதம் 18-ஆம் தேதி இந்தோனேசியா நாட்டின் ஜகார்த்தா மற்றும் பாலேம்பாங் நகரில் நடக்கவிருக்கிறது. இந்த போட்டியில் விளையாடவிருக்கும் 18 வீரர்கள் அடங்கிய இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

இதில் மூத்த கோல் கீப்பரான ஸ்ரீஜேஷ் கேப்டனாக அறிவிக்கப்பட்டார். சிங்க்லேசன சிங் துணை கேப்டனாக அறிவிக்கப்பட்டார். மேலும் மன்ப்ரீத் சிங், சிம்ரான்ஜீத் சிங் மற்றும் விவேக் சாகர் ப்ரசாத் ஆகியோரும் அணியில் இடம் பிடித்துள்ளனர்.

சாம்பியன் டிராபி தொடரில் ஓய்வு கொடுக்கப்பட்டிருந்த ருபிந்தர் பால் சிங் இத்தொடரில் சேர்க்கப்பட்டுள்ளார். இதனிடையே கேப்டனாக அறிவிக்கப்பட்டிருக்கும் ஸ்ரீஜேஷ், ப்ரேடாவில் நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் சிறந்த கோல் கீப்பருக்கான விருது பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

நன்றி- பத்மா மகன், திருச்சி

Sharing is caring!