இந்த பவுலர் பந்து வீச்சில் விளையாட எனக்கு ஆசை!

இந்திய அணியின் முன்னாள் வீரரான சச்சின் டெண்டுல்கர், இப்போது இருக்கும் பந்து வீச்சாளர்களில் யாருடைய பந்து வீச்சில் விளையாட ஆசை என்பதை கூறியுள்ளார்.

கடந்த 1990 முதல் 2000 வரை எந்த அணியைச் சேர்ந்த பந்து வீச்சாளராக இருந்தாலும், சரி அவர்களின் பந்து வீச்சை எளிதாக சமாளித்து ஆடித்து ஆடக் கூடியவர் சச்சின்.

இதன் காரணமாக சச்சின் விக்கெட்டை வீழ்த்தினால் போதும், இந்தியா காலி என்கிற அளவிற்கு சக அணி பந்து வீச்சாளர்கள் அவரை அவுட்டாக்குவதிலே கவனமாக இருப்பர்.

இருப்பினும் சச்சின் தன்னுடைய அசாத்தியமான திறமையால், எப்படிப்பட்ட பந்தையும் எளிதாக விளையாடிவிடுவார்.

இந்நிலையில், இவரிடம் சமீபத்தில் பேட்டி ஒன்று எடுக்கப்பட்டது. அப்போது அவர், இந்தக் காலகட்டத்தில் ஆப்கானிஸ்தான் அணியை சேர்ந்த மாயபந்து வீச்சாளரான ரஷித் கானை எதிர்கொள்ள வேண்டும் என ஆசையாக உள்ளது.

அந்த அளவுக்கு ரஷித் தனது பந்துவீச்சில் பல மாறுதல்களை அடிக்கடி செய்பவர் லெக் ஸ்பின், ஆப் ஸ்பின்,கூக்ளி போன்ற அனைத்தையும் பயன்படுத்தி எதிரணி வீரர்களை திணரசெய்வார். இதனால் ரஷித் கான்பந்துவீச்சை எதிர்கொள்வது சுவாரசியமாக இருக்கும் என தெரிவித்துள்ளார்.

Sharing is caring!