இன்று நடக்கும் போட்டியிலும் இந்திய அணி வெற்றி தொடருமா? ரசிகர்கள் எதிர்பார்ப்பு

நியூசிலாந்து:
இன்று நடக்கும் போட்டியில் இந்திய அணியின் வெற்றி தொடருமா என்ற எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.

ஆஸ்திரேலியா சுற்றுப்பயணத்திற்குப்பின் இந்திய கிரிக்கெட் அணி தற்போது நியூசிலாந்துடன் 5 ஒருநாள் போட்டி மற்றும் 3 டி-20 போட்டியில் பங்கேற்று ஆடி  வருகிறது. கடந்த 23ம் தேதி நடந்த முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது.

இந்நிலையில் 2வது  போட்டி இன்று காலை தொடங்குகிறது. தமிழக வீரர் விஜய் சங்கர் அணியில் சேர்க்கப்பட்டாலும் ஆடும் லெவனில் இடம் பெறுவாரா என்று தமிழக ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர். நியூசிலாந்து முதல் ஆட்டத்தில் தோற்றதால் நெருக்கடிக்கு தள்ளப்பட்டுள்ளது.

ஆனால் இந்திய அணி பேட்டிங், பவுலிங்கில் பலமாகவும், பார்மிலும் உள்ளதால் உற்சாகமாக உள்ளது. தடை ரத்து செய்யப்பட்டதால் பாண்ட்யா நியூசிலாந்து சென்று அணியில் இணைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த போட்டியிலும் இந்திய அணியின் வெற்றி தொடருமா என்று ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.

நன்றிபத்மா மகன், திருச்சி

Sharing is caring!