இன்றைய ஆட்டத்தில் வெற்றி தேவையில்லை தோல்வி அடையாமல் பிரேசிலை மீட்பாரா நெய்மர்?

உலக கோப்பை கால்பந்து தொடரில் இ பிரிவில் இன்றைய ஆட்டத்தில் முன்னாள் உலக சாம்பியன் பிரேசில் செர்பியாவுடன் மோதுகிறது. வெற்றி கூட தேவையில்லை தோல்வி அடையாமல் இருந்தால் அடுத்த சுற்றுக்கு செல்லலாம் என்கிற கணக்கில் களம் இறங்க உள்ளது பிரேசில். இ பிரிவில் பிரேசில் மற்றும் சுவிட்சர்லாந்து தலா 4 புள்ளிகளுடன் உள்ளன.

செர்பியா 3 புள்ளிகளுடன் உள்ளது. இன்று நடக்கும் செர்பியாவுக்கு எதிரான ஆட்டத்தில் டிரா செய்தாலே பிரேசில் அடுத்தச் சுற்றுக்கு முன்னேறும்.

மற்றொரு ஆட்டத்தில் சுவிட்சர்லாந்து, கோஸ்டாரிகாவை சந்திக்கிறது. இதில் டிரா செய்தால் சுவிட்சர்லாந்தும் அடுத்தச் சுற்றுக்கு முன்னேறும்.

ஆனால் தோற்றால் ஏறக்குறைய வெளியேற வேண்டியது தான்.செர்பியாவை பொறுத்தவரை இன்றைய ஆட்டத்தில் கட்டாயம் வென்றாக வேண்டும். இதே பிரிவில் 4 புள்ளிகளுடன் உள்ள மற்றொரு அணியான சுவிட்சர்லாந்தும் தங்களது இறுதி லீக்கில் கோஸ்டாரிகாவுடனான ஆட்டத்தை டிரா செய்தாலே அடுத்த சுற்றுக்கு செல்ல வாய்ப்பு உண்டு.

பிரேசில் கால்பந்தாட்ட வரலாற்றில் மிக சிறிய வயதில் கேப்டன் பொறுப்புக்கு வந்த முதலாவது வீரர் என்ற பெருமையை நெய்மர் பெற்றுள்ளது எவ்வளவு முக்கியமோ அதைப் போன்று அடுத்த சுற்றுக்கு பிரேசில் அணியை தோல்வி அடையாமல் மீட்டுச் செல்வதும் அவரது காலில்தான் உள்ளது.

Sharing is caring!