இன்றைய தினம் இந்தியப் பெண்ணை கரம்பிடிக்கிறார் பாகிஸ்தானின் சகலதுறை வீரர்..!

இந்தியப் பெண்ணை இன்னும் சில மணிநேரங்களில் திருமணம் செய்யவுள்ள பாக்கிஸ்தானின் சகலதுறை வீரர் ஹசன்அலி திருமணத்திற்கு முன்னர் தான் தனது வருங்கால மனைவியுடன் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படங்கள்வெளியாகியுள்ளன.

பாக்கிஸ்தானின் பிரபல திருமணபுகைப்படப்பிடிப்பு நிறுவனம் இந்த படங்களை சமூக ஊடகங்களில் பகிர்ந்துகொண்டுள்ளது.துபாயில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை வெளியிட்டுள்ள நிறுவனம் விரைவில் திருமண படங்களை வெளியிடவுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.பலர் ஹசன் அலி திருமணம் செய்யவுள்ள இந்திய பெண் சமியா அரூசின் படங்களை பார்க்க விரும்புகின்றனர் சமூக ஊடகங்களில் பல போலி படங்கள் உலாவுகின்றன எனவும் அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதேவேளை திருமணக்கொண்டாட்டங்களில் கடந்த சில நாட்களாக இடம்பெறுவதாகவும் திருமண நிகழ்வில் கலந்துகொள்வதற்காக ஹசன் அலியின் நெருங்கிய நண்பரான சுழற்பந்து வீச்சாளர் சடாப் ஹான் துபாய் சென்றுள்ளார் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.திங்கட்கிழமை மெஹ்கிந்தி மற்றும் நிக்கா வைபவங்கள் இடம்பெற்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.இதேவேளை கிரிக்கெட் பயிற்சி காரணமாக பல முன்னணி வீரர்கள் துபாயில் இடம்பெறவுள்ள திருமணத்தில் கலந்துகொள்ளமாட்டார்களென தகவல்கள் வெளியாகியுள்ளன.

Sharing is caring!