இரண்டாம் சுற்றில் சிங்கப்பூரை 74-61 எனும் கோல் கணக்கில் இலங்கை வெற்றி

ஆசிய வலைப்பந்தாட்டத் தொடரில் இரண்டாம் சுற்றில் சிங்கப்பூரை 74-61 எனும் கோல் கணக்கில் இலங்கை வெற்றி கொண்டது.

சிங்கப்பூரில் நடைபெறும் ஆசிய வலைப்பந்தாட்டத்தின் இரண்டாம் சுற்று இன்று ஆரம்பமானது.

இதில் இலங்கை முதல் போட்டியில் சிங்கப்பூரை எதிர்கொண்டது.

போட்டியில் முதல் கால் மணியை 18-12 எனும் கோல் கணக்கில் வென்ற இலங்கை, இரண்டாம் கால் மணியை 19-16 என கைப்பற்றியது.

தொடர்ந்து மூன்றாம் கால் மணியை 21-14 என இலங்கை தனதாக்க, இறுதி கால் மணியில் திறமையை வெளிப்படுத்தி​ய சிங்கப்பூர் அணி அதனை 19 -16 என தன்வசப்படுத்தியது.

எனினும், முதல் மூன்று கால் மணிகளில் முன்னிலை பெற்ற இலங்கை அணி 74 – 61 எனும் கோல் கணக்கில் அபார வெற்றியீட்டியது.

இரண்டாம் சுற்றில் இலங்கை அணி நாளை (05) மலேஷியாவுடனும், நாளை மறுதினம் (06) ஹாங்காங்குடனும் விளையாடவுள்ளது.

Sharing is caring!