இரண்டாவது டெஸ்ட் போட்டி சமநிலையில் நிறைவு

சுற்றுலா இலங்கை அணிக்கும் மேற்கிந்திய தீவுகள் அணிக்கும் இடையிலான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி சமநிலையில் நிறைவடைந்துள்ளது.

போட்டியின் இறுதிநாளான நேற்று 296 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய மேற்கிந்திய தீவுகள் அணி 5 விக்கட்டுக்களை இழந்து 147 ஓட்டங்களை பெற்றிருந்த நிலையில் போட்டி நிறைவுக்கு கொண்டுவரப்பட்டது.

இந்தபோட்டியில் இலங்கை அணி தமது முதல் இனிங்சில் 253 ஓட்டங்களையும், இரண்டாவது இனிங்சில் 342 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டது.

மேற்கிந்திய தீவுகள் அணி தமது முதல் இனிங்சில் 342 ஓட்டங்களை பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.

இதன்படி, மூன்று போட்டிகள் கொண்ட இந்த தொடரின் முதல் போட்டியில் வெற்றிப்பெற்றுள்ள மேற்கிந்திய தீவுகள் அணி ஒன்றுக்கு பூச்சியம் என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

Sharing is caring!