இராணுவத்தில் இணையும் தினேஷ் சந்திமால்

இலங்கையின் முன்னாள் கிரிக்கட் அணித்தலைவர் தினேஷ் சந்திமால் இன்று (26) முதல் இலங்கை இராணுவத்தில் இணையவுள்ளார்.

இலங்கை தன்னார்வப் படையணியின் அதிகாரியாக தினேஷ் சந்திமால் சேவையாற்றவுள்ளார்.

இதேவேளை, இலங்கை இராணுவ ஆயுதப்படைகளின் அதிகாரியாக இலங்கை இராணுவ கிரிக்கெட் அணியையும் இவர் பிரதிநிதித்துவப்படுத்தவுள்ளார்.

மேலும், தேசிய விளையாட்டு வீரர்கள் நால்வர் அடுத்த இரு வாரங்களில் இராணுவத்தில் இணையவுள்ளதாக இலங்கை இராணுவத்தின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

Sharing is caring!