இருபதுக்கு 20 தொடருக்கான பாக். குழாம் அறிவிப்பு
இலங்கைக்கு எதிரான இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடருக்கான பாகிஸ்தான் குழாம் அறிவிக்கப்படடுள்ளது.
அணியின் தலைவராக சப்ராஸ் அஹமட் மற்றும் உப தலைவராக பாபர் அஸாம் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை, உமார் அக்மால் மற்றும் அஹமட் செஷாட் ஆகியோரும் குழாத்தில் இணைக்கப்பட்டுள்ளார்.
இருவரும் 16 மாதங்களுக்கு பின்னர் குழாமிற்கு அழைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, பஹீம் அஷ்ரப்பும் இலங்கைக்கு எதிரான போட்டியில் களமிறங்கவுள்ளார்.
எவ்வாறாயினும், ஒருநாள் தொடரில் பங்கேற்ற மொஹமட் ரிஷ்வான், இமாம் உல் ஹக் மற்றும் அபீட் அலீ ஆகியோருக்கு 20 க்கு 20 குழாத்தில் பங்கேற்பதற்கான வாய்ப்பு கிட்டவில்லை.
இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான இருபதுக்கு 20 போட்டி நாளை மறுதினம் (05) ஆரம்பமாகவுள்ளது.
© 2012-2021 Analai Express | அனலை எக்ஸ்பிறஸ். Developed by : Shuthan.S