இறுதிக்கட்டத்தில்….!

ரஷ்யாவில் நடைபெற்று வரும் 21-வது உலகக்கிண்ண கால்பந்தாட்ட போட்டி தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.

தொடர் துவங்குவதற்கு முன்பே அர்ஜெண்டினா, ஜேர்மனி, போர்ச்சுகல், பிரேசில் போன்ற அணிகள் உலககோப்பையை கைப்பற்றும் என்று முன்னணி கால்பந்து வீரர்கள் எல்லாம் கணித்தார்கள்.

ஆனால் அது எல்லாம் வெறும் கணிப்பு தான், அன்றைய தினத்தில் யார் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்துகிறாரோ, அவர் தான் அன்றைய ஹீரோ என்பதை குரோசியா அணி நிரூபித்திருக்கிறது என்று கூறலாம்.

குரேசியா அணி காலிறுதிப் போட்டியோடு வெளியேறிவிடும் என்று நினைத்த நினையில் தற்போது இறுதிப் போட்டி வரை முன்னேறி வரலாறு படைக்க காத்து கொண்டிருக்கிறது.

அதே போன்று இங்கிலாந்து அணி 28-ஆண்டுகளுக்கு பிறகு அரையிறுதிப்போட்டிக்கு தகுதி பெற்று, அரையிறுதிப் போட்டியில் குரோசியாவுடன் வீழ்ந்தது.

இந்நிலையில் குரோசியா அணி வரும் ஞாயிற்று கிழமை பிரான்ஸ் அணியுடன் இறுதி ஆட்டத்தில் மோதவுள்ளது.

அதே போன்று இங்கிலாந்து அணி மூன்றாவது இடத்திற்காக பெல்ஜியம் அணியுடன் நாளை மோதவுள்ளது.

பெல்ஜியம் அணியை இங்கிலாந்து வீழ்த்தி மூன்றாவது இடத்தை பிடித்தால் அந்தணிக்கு 1 பில்லியன் 62 கோடி ரூபாய் பரிசாக வழங்கப்படும் என கூறப்படுகிறது.

Sharing is caring!