இலங்கைக்கு எதிரான ஹராரே டெஸ்ட்..வலுவான நிலையில் ஸிம்பாப்வே…!!

இலங்கை அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் சிம்பாப்வே அணி தனது முதல் இன்னிங்ஸில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 406 ஓட்டங்களை குவித்துள்ளது.இலங்கை மற்றும் சிம்பாப்வே அணிகளுக்கிடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி நேற்றைய தினம் ஹராரேயில் ஆரம்பமானது.

போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்று முதலில் துடுப்பெடுத்தாடுவதற்கு தீர்மானித்த சிம்பாப்வே அணி நேற்றைய முதலாம் நாள் ஆட்ட நேர முடிவில் சிம்பாப்வே அணி 6 விக்கெட்டுக்களை இழந்து 352 ஓட்டங்களை குவித்திருந்தது.இந் நிலையில், இரண்டாம் நாள் ஆட்டம் இன்று ஆரம்பிக்க சிம்பாப்வே அணி சற்று முன்னர் 115.3 ஓவர்களை எதிர்கொண்டு அனைத்து விக்கெட்டுக்களையும், இழந்து 406 ஓட்டங்களை குவித்தது.

சிம்பாப்வே அணி சார்பில் பிரின்ஸ் மஸ்வாரே 9 ஓட்டங்களையும், கெவின் கசுசா 38 ஓட்டங்களையும், கிரேக் எர்வின் 12 ஓட்டங்களையும், பிரண்டன் டெய்லர் 62 ஓட்டங்களையும், அணித் தலைவர் சேன் வில்லியம்ஸ் சிறப்பதாக துடுப்பெடுத்தாடி 107 ஓட்டங்களையும், சிக்கந்தர் ராசா 72 ஓட்டங்களையும், ரெஜிஸ் சகாப்வா 31 ஓட்டங்களையும், டினோடெண்டா முட்டோம்போட்ஸி 33 ஓட்டங்களையும், டொனால்ட் டிரிபனோ 13 ஓட்டங்களையும், விக்டர் நியாச்சி 6 ஓட்டங்களையும் பெற்று ஆட்டமிழக்க கார்ல் மும்பா 11 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காதிருந்தார்.

பந்து வீச்சில் இலங்கை அணி சார்பில் லஷித் எம்புலுதெனிய 3 விக்கெட்டுக்களையும், தனஞ்சய டிசில்வா 3 விக்கெட்டுக்களையும், சுரங்க லக்மால் 2 விக்கெட்டுக்களையும், லஹிரு குமார ஒரு விக்கெட்டினையும் வீழ்த்தினர்.இலங்கை அணி தனது முதல் இன்னிங்ஸிக்காக தற்போது துடுப்பெடுத்தாடி வருகிறது.

Sharing is caring!