இலங்கைக்கு சவால்…அவுஸ்ரேலியாவின் நிர்ணயித்த இலக்கு 516

அந்த இலக்கை நோக்கி பதிலளித்தாடும் இலங்கை அணி இன்றைய மூன்றாம் நாள் ஆட்ட நேர முடிவில் விக்கெட் இழப்பின்றி 17 ஓட்டங்களை பெற்றிருந்தது.

கென்பரா மெனுகா ஓவல் மைதானத்தில் நடைபெறும் போட்டியில் அவுஸ்திரேலியா முதல் இன்னிங்ஸில் 534 ஓட்டங்களை பெற்று ஆட்டத்தை நிறுத்துவதாக அறிவித்தது.

3 விக்கெட் இழப்புக்கு 123 ஓட்டங்களுடன் இலங்கை அணி இன்றைய மூன்றாம் நாள் ஆட்டத்தை ஆரம்பித்தது.

ஜோய் ரிச்சட்சன் வீசிய பந்து குசல் ஜனித் பெரேராவின் தலைக்கவசத்தில் பட்டது.

இதனால் அவர் 29 ஓட்டங்களை பெற்ற நிலையில் மைதானத்திலிருந்து வெளியேறினார்.

நேற்றைய தினத்தில் பந்துதலையில் பட்டதால் மைதானத்திலிருந்து வெளியேறிய திமுத் கருணாரத்ன பொறுமையுடன் துடுப்பெடுத்தாடி 59 ஓட்டங்களை பெற்றார்.

மத்தியவரிசை துடுப்பாட்ட வீரர்கள் குறைந்த ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தனர்.

இலங்கை அணியின் முதல் இன்னிங்ஸ் 215 ஓட்டங்களுடன் முடிவுக்கு வர போட்டியில் 319 ஓட்டங்களால் அவுஸ்திரேலியா முன்னிலைப் பெற்றது

மிச்செல் ஸ்டார்க் 5 விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.

இரண்டாம் இன்னிங்ஸை ​தொடர்ந்த அவுஸ்திரேலியா சார்பாக டிரவிஸ் ​ஹெட் அரைச்சதம் கடந்த நிலையில் 59 ஓட்டங்களை பெற்றார்.

அபாரமாக துடுப்பெடுத்தாடிய உஸ்மான் கவாஜா டெஸ்ட் அரங்கில் எட்டாவது சதத்தை எட்டிய நிலையில் 101 ஓட்டங்களை பெற்றார்.

அவுஸ்திரேலியா 3 விக்கெட் இழப்புக்கு 196 ஓட்டங்களுடன் இரண்டாம் இன்னிங்ஸை நிறுத்துவதாக அறிவித்தது.

இதன்படி போட்டியில் இலங்கை அணியின் வெற்றி இலக்கு 516 ஓட்டங்களாக நிர்ணயிக்கப்பட்டது.

அந்த இலக்கை நோக்கி களமிறங்கியுள்ள இலங்கை அணி இன்றைய மூன்றாம் நாள் ஆட்ட நேர முடிவில் விக்கெட் இழப்பின்றி 1 ஓட்டங்களை பெற்றிருந்தது.

Sharing is caring!