இலங்கைக்கு தொடரும் எச்சரிக்கை

எதிர்வரும் ஆறு மாத காலப்பகுதியினுல் ஸ்ரீலங்கா கிரிக்கட் தேர்தலை நடத்துமாறு சர்வதேச கிரிக்கெட் பேரவையின் நிர்வாகச் சபை அறிவுறுத்தல் விடுத்துள்ளது.

அதன் 75வது மாநாடு நேற்று அயர்லாந்து டப்லின் நகரில் இடம்பெற்றது.

இதன்போது பந்தை சேதப்படுத்துதல் மற்றும் தனிப்பட்ட குரோதம் என்பன தொடர்பிலான சட்டங்களை கடுமையாக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இலங்கை தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள சர்வதேச கிரிக்கட் பேரவையின் நிர்வாகச் சபை, விளையாட்டுத்துறை அமைச்சரின் பிரதி நிதியொருவர் அதன் கூட்டங்களில் கலந்துக்கொள்ள முடியும் என அறிவித்துள்ளது.

எவ்வாறாயினும் ஸ்ரீலங்கா கிரிக்கட் தேர்தல் எதிர்வரும் 6 மாத காலத்திற்குள் நடத்தப்படாவிட்டால் இலங்கையின் அங்கத்துவம் குறித்து மீள் பரிசீலனை செய்யவேண்டி ஏற்படும் எனவும் சர்வதேச கிரிக்கெட் சபை எச்சரிக்கை விடுத்துள்ளது.

Sharing is caring!