இலங்கைக்கு வருகை தரும் இந்தியாவின் நட்சத்திர துடுப்பாட்ட வீரர்!

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர துடுப்பாட்ட வீரரான சச்சின் டெண்டுல்கார், விரைவில் இலங்கைக்கான விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளார்.

ஈஸ்டர் ஞாயிறு தற்கொலை குண்டுத் தாக்குதலை அடுத்து இந்திய சந்தையில் இலங்கை சுற்றுலா துறையினை மேம்படுத்தும் நோக்கிலேயே அவர் வருகை தரவுள்ளார்.

சசச்சின் டெண்டுல்காருடன் முன்னணி பொலிவூட் நட்சத்திரங்களும் இலங்கைக்கு வருகை தரவுள்ளனர். இந்த விஜயம் ஆகஸ்ட் மாதம் இடம்பெறவுள்ளது என இலங்கை சுற்றுலா மேம்படுத்தல் சபையின் தலைவர் கிஷு கொம்ஸ் தெரிவித்துள்ளார்.

குறித்த காலப் பகுதியில் இடம்பெறும் கொழும்பில் இடம்பெறும் Colombo Fashion Weekஇலும் சச்சின் டெண்டுல்கார் கலந்துகொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Sharing is caring!