இலங்கையின் முன்னாள் கிரிக்கெட் வீரர் நவீட் நவாஸ் பங்களாதேஷின் கிரிக்கெட் அணியின் பயிற்றுநராக நியமிப்பு

இலங்கையின் முன்னாள் கிரிக்கெட் வீரர் நவீட் நவாஸ், பங்களாதேஷின் 19 வயதுக்குட்பட்ட கிரிக்கெட் அணியின் பயிற்றுநராக நியமிக்கப்பட்டுள்ளார்.

எதிர்வரும் இளையோருக்கான உலகக்கிண்ணக் கிரிக்கெட் தொடர் வரைக்கும் பங்களாதேஷின் 19 வயதுக்குட்பட்ட அணியின் பயிற்றுநராக நவீட் நவாஸ் நியமிக்கப்பட்டதாக பங்களாதேஷ் கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.

இளம் வீரர்களின் ஆற்றல்களை மேம்படுத்துவதற்காக இந்த நியமனம் வழங்கப்பட்டதாக பங்களாதேஷ் கிரிக்கெட் சபையை மேற்கோள்காட்டி சர்வதேச கிரிக்கெட் பேரவையின் இணையத்தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நவீட் நவாஸின் அனுபவம் இளம் வீரர்களுக்கு சிறந்த உந்துசக்தியாக இருக்கும் என பங்களாதேஷ் நம்பிக்கை வெளியிட்டுள்ளது.

44 வயதுடைய நவீட் நவாஸ் ஒரு டெஸ்ட் மற்றும் மூன்று சர்வதேச ஒருநாள் போட்டிகளில் இலங்கை அணிக்காக விளையாடியுள்ளார்

Sharing is caring!