இலங்கையில் நடைபெறும்ப் புதிய டி20 லீக் தொடரில் இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் விளையாடவுள்ளதாக தகவல்!

இலங்கையில் நடைபெறும்ப் புதிய டி20 லீக் தொடரில் இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் விளையாடவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியாவில் நடைபெறும் ஐபிஎல் தொடர் போன்று உலகின் பல்வேறு நாடுகளில் டி20 தொடர் நடைபெற்று வருகிறது.

அவுஸ்திரேலியாவில் பிக்பாஸ் லீக் தொடர், கரீபியன் பிரீமியர் லீக், பாகிஸ்தானில் பாகிஸ்தான் சூப்பர் லீக், வங்கதேசத்தில் வங்கதேசப் பிரீமியர் லீக் என தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

இதே போன்று இலங்கையில், இலங்கை பிரீமியர் லீக் என்ற ஒரு டி20 லீக் தொடங்கப்பட்டது. ஆனால் போதிய ஸ்பான்சர்கள் மற்றும் நிதி இன்றி அந்த தொடர் பாதியில் கைவிடப்பட்டது.

தொடர்ந்து அதற்கான முயற்சிகள் நடைபெற்று கடந்த 7 வருடங்களுக்கு மேலாக அதனை சரிசெய்ய முடியவில்லை.

Sharing is caring!