இலங்கையுடனான பயிற்சிப் போட்டியில் அவுஸ்திரேலியா வெற்றி

உலகக்கிண்ண கிரிக்கெட் தொடருக்கான முன்னோடியாக, இலங்கை அணிக்கு எதிரான நேற்றைய பயிற்சி ஆட்டத்தில் அவுஸ்திரேலிய அணி 5 விக்கெட்களால் வெற்றியீட்டியுள்ளது.

சவுத்ஹெம்டனில் நடைபெற்ற இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி சார்பாக லஹிரு திரிமன்னே 56 ஓட்டங்களை பெற்றார்.

தனஞ்சய டி சில்வா மற்றும் திஸ்ஸர பெரேரா ஜோடி ஏழாவது விக்கெட்காக 64 ஓட்டங்களை பகிர்ந்து இலங்கை அணியின் ஓட்ட எண்ணிக்கையை அதிகரிக்கும் முயற்சியில் ஈடுபட்டது.

திஸ்ஸர பெரேரா 27 ஓட்டங்களை பெற்றுக் கொள்ள, தனஞ்சய டி சில்வா 43 ஓட்டங்களை பெற்றார்.

இலங்கை அணி 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 239 ஓட்டங்களை பெற்றது.

வெற்றி இலக்கை நோக்கி களமிறங்கிய அவுஸ்திரேலியா சார்பாக ஷோன் மார்ஸ் 34 ஓட்டங்களையும் கிளேன் மெக்ஸ்வெல் 36 ஓட்டங்களையும் பெற்றனர்.

மார்க்கஸ் ஸ்டொய்னிஸ் 30 ஓட்டங்களை பெற்றார்.

ஆரம்ப துடுப்பாட்ட வீரரான உஸ்மான் கவாஜா 89 ஓட்டங்களை பெற்று அவுஸ்திரேலியாவின் வெற்றி வாய்ப்பை அதிகரித்தார்.

மத்தியவரிசையில் அலெக் ஷ் கெரி 18 ஓட்டங்களைப் பெற்றுக் கொள்ள, அவுஸ்திரேலியா 44.5 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு வெற்றி இலக்கை அடைந்தது.

நாளை மறுதினம் இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் ஆரம்பமாகவுள்ள உலகக்கிண்ண கிரிக்கெட் தொடருக்கு முன்னர் இலங்கை அணி விளையாடிய இறுதியான பயிற்சிப்போட்டி இதுவென்பது குறிப்பிடத்தக்கது.

Sharing is caring!