இலங்கையை பதம் பார்க்குமா பாகிஸ்தான்?

உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியின் இன்றைய ஆட்டத்தில், ஆசிய கண்டத்தை சேர்ந்த, இரு பலம் வாய்ந்த அணிகள் மாேதவுள்ளன. பிரிஸ்டோலில் நடைபெறும் இன்றைய ஆட்டத்தில், இலங்கை அணியை, பாகிஸ்தான் எதிர்கொள்ள உள்ளது.

இரு அணிகளுக்குமே இந்த ஆட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுவதால், இரு அணி வீரர்களுமே தங்கள் முழு திறனையும் வெளிப்படுத்துவர் என எதிர்பார்க்கலாம். மேலும், மேற்கிந்தைய தீவுகளுக்கு எதிரான தோல்விக்கு, இந்த ஆட்டம் சரியான தீர்வாக இருக்கும் என பாகிஸ்தான் ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர். ஏற்கனவே இங்கிலாந்தை வென்ற உற்சாகமும் அவர்களிடம் உள்ளது.

ஆப்கானிஸ்தானை தோற்கடித்த இலங்கை அணி அதே உத்வேகத்துடன் பாகிஸ்தானை எதிர்த்து களம் காண்கிறது. பிரிஸ்டோல் மைதானம் பொதுவாக பேட்ஸ்மேன்களுக்கு சாதகமாக இருக்கும். இதில், இரண்டாவது பேட்டிங் செய்த அணியே அதிகம் வென்றுள்ளது.

எனினும், இன்றைய நாளில் மைதானம் இருக்கும் பகுதியில் மேகக் கூட்டங்கள் அதிகம் காணப்படுவதால், மழை பெய்ய அதிக வாய்ப்புள்ளது. இதன் காரணமாக, ஆட்டம் தடை படைவும் மிக அதிக வாய்ப்புள்ளது.

எனினும், இந்த போட்டியில் எப்படியும் வெற்ற பெற வேண்டும் என்ற உத்வேகத்துடன் இரு அணி வீரர்களும் களம் காண்பதால், இந்த போட்டி ரசிகர்களுக்கு நல்ல விருந்தாக அமையும் என்பதில் சந்தேகம் இல்லை.

இலங்கை அணி வீரர்கள், பெரேரா, மலிங்கா, பாக்., வீரர் முகமது அமீர் ஆகியோர் சிறந்த வீரர்களாக ஜொலிக்கலாம். இந்த ஆட்டம் பெரும்பாலும் பாகிஸ்தானுக்கு சாதகமாக முடிய வாய்ப்புள்ளது.

Sharing is caring!