இலங்கையை விட்டு வெளியேறத் தயாராகும் பிரபல நட்சத்திரம்..!!

இலங்கை கிரிக்கெட் வேகப்பந்து வீச்சாளர் லசித் மாலிங்க அவுஸ்திரேலியாவில் நிரந்தரமாக குடியேற தயாராகுவதாக கிரிக்கெட் தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.

உலகக் கிண்ண சுற்று பயணத்தின் கீழ் தனது குடும்ப உறுப்பினர்களுடன் அவுஸ்திரேலியா சென்ற லசித் மாலிங்க அங்கு சில நண்பர்களை சந்தித்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.இதேவேளை, இந்த மாத இறுதி வாரத்தில் ஆரம்பிக்கப்படவிருந்த பங்களாதேஷ் கிரிக்கெட் தொடரின் முதலாவது போட்டியில் விளையாடிய பின்னர் லசித் மாலிங்க ஒரு நாள் போட்டிகளுக்கு ஓய்வு வழங்க தீர்மானித்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.அவுஸ்திரேலியாவில் இருந்து தெரிவு குழு தலைவர் அனந்த டி மல் என்பவருக்கு அழைப்பேற்படுத்தி தான் பங்களாதேஷ் போட்டியில் கலந்து கொள்வதற்காக 22ஆம் திகதி இலங்கைக்கு வரவுள்ளதாக அறிவித்துள்ளார்.அவுஸ்திரேலியாவில் குடியேற செல்லும் லசித் மாலிங்க அதன் பயிற்சியாளராக செயற்படுவதற்கு ஆயத்தங்கள் உள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

Sharing is caring!