இலங்கை அணித்தலைவராக லசித் மலிங்கா நியமனம்!

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டி20 தொடரில் இலங்கை அணித்தலைவராக மலிங்கா அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் போட்டிகள் குறித்து அவர் பேசியுள்ளார்.

லசித் மலிங்கா தலைமையிலான இலங்கை டி20 கிரிக்கெட் அணியானது இந்தியா மற்றும் அவுஸ்திரேலியாவுடானான தொடர்களில் மோசமான தோல்வியை சந்திதிருந்தது.

இதன் பின்னர் டி20 போட்டிகளுக்கான இலங்கை கிரிக்கெட் அணியின் தலைமைப் பதவியை மாற்ற இலங்கை கிரிக்கெட் நிறுவனம் பரீசிலித்து வருவதாக ஊடகங்களில் செய்திகள் வெளிவந்தன.

இந்நிலையிலேயே மலிங்கா வெஸ்ட் இண்டீஸ் அணியுடனானா டி20 தொடருக்கு இலங்கை அணித் தலைவராக மீண்டும் செயல்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய மலிங்கா, நாங்கள் எங்கள் சொந்த மண்ணில் விளையாடவுள்ளோம். போட்டியை வெல்ல இது எங்களுக்கு ஒரு நல்ல வாய்ப்பாகும். ஆகவே எங்கள் அனைவருக்கும் ஆதரவு வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன் என கூறியுள்ளார்.

இலங்கை – வெஸ்ட் இண்டீஸ் ஒருநாள் தொடர் முதலில் தொடங்கவுள்ள நிலையில் அதற்கு இடையில் டி20 தொடருக்கான இலங்கை அணி அறிவிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

Sharing is caring!