இலங்கை அணியில் ஐந்து சுழற்பந்து வீச்சாளர்கள் இடம்பிடித்துள்ளனர்

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இலங்கை அணியில் ஐந்து சுழற்பந்து வீச்சாளர்கள் இடம்பிடித்துள்ளனர்.

இங்கிலாந்து கிரிக்கெட் அணி அக்டோபர் – நவம்பரில் இலங்கையில் சுற்றுப் பயணம் செய்து மூன்று வகை கிரிக்கெட் தொடரிலும் விளையாட இருக்கிறது. மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நவம்பர் 6-ந்தேதி காலே மைதானத்தில் தொடங்குகிறது.
இதற்கான இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் கவுசல் சில்வா, தில்ருவான் பெரேரா, ரங்கணா ஹெராத், மலிண்டா புஷ்பகுமாரா, லக்‌ஷ்மண் சண்டகன் ஆகிய ஐந்து சுழற்பந்து வீச்சாளர்கள் இடம்பிடித்துள்னர். இதனால் இங்கிலாந்துக்கு எதிராக இலங்கை முற்றிலும் சுழற்பந்து வீச்சுக்கு சாதகமான ஆடுகளத்தை தயார் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இலங்கை அணியில் இடம்பிடித்துள்ள வீரர்கள் விவரம்:-
1. தினேஷ் சண்டிமல் (கேப்டன்), 2. திமித் கருணாரத்னே, 3. கவுசல் சில்வா, 4. குசால் மெண்டிஸ், 5. மேத்யூஸ், 6. டிக்வெல்லா, 7. தனஞ்ஜெயா டி சில்வா, 8. ரோஷன் சில்வா, 9. தில்ருவான் பெரேரா, 10. ரங்கணா ஹெராத், 11. மலிண்டா புஷ்பகுமாரா, 12. சுரங்கா லக்மல், 13. கசுன் ரஜிதா, 14. லக்‌ஷ்மண் சண்டகன், 15. லஹிரு குமாரா (உடற்தகுதி பெற்றால்).

Sharing is caring!