இலங்கை அணி எடுத்துள்ள முக்கிய தீர்மானம்..!!

பல தடைகளை கடந்து இலங்கை கிரிக்கெட் அணி 10 ஆண்டுகள் கழித்து, பாகிஸ்தான் சென்று 3 ஒருநாள் மற்றும் 3 டி 20 போட்டிகளில் விளையாடுகிறது.

இலங்கை அணியானது, 2009ம் ஆண்டு பாகிஸ்தானில் சுற்றுப் பயணம் செய்து விளையாடிய போது லாகூர் மைதானத்திற்கு இலங்கை வீரர்கள் பேருந்தில் சென்ற போது தீவிரவாதிகள் துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்தினர்.

அதில் 8 பேர் உயிரிழந்தனர். இலங்கை வீரர்கள் காயத்தோடு அதிஷ்டவசமாக உயிர்தப்பினர்.

அதில் இருந்து முக்கியமான அணிகள் பாகிஸ்தான் சென்று விளையாட மறுப்பு தெரிவித்து வருகிறது.

இந்த நிலையில் இலங்கை, பாகிஸ்தான் அணிகளுக்கு இடையில் அக்டோபர் மாதம் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெறுகிறது. பாகிஸ்தான் நடத்தும் இந்த தொடரை பாகிஸ்தான் மண்ணில் நடைபெற வேண்டும் என விரும்புகிறது. இந்த இரண்டு போட்டிகளும் ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் கீழ் வருகிறது.

இந்த நிலையில் பாகிஸ்தானில் சென்று விளையாடுவதற்கு இலங்கை அணி தற்போது தீர்மானித்துள்ளது.

அடுத்த மாதம் பாகிஸ்தானுக்கு பயணிக்கவுள்ள இலங்கை அணி, செப்டம்பர் 27ம் திகதி முதல் அக்டோபர் 9 வரை போட்டிகளில் பங்கு பெற உள்ளது.

இரு அணிகளுக்கிடையிலான முதலாவது ஒருநாள் போட்டி, செப்டம்பர் 27ம் திகதி கராச்சியில் நடக்க இருக்கின்றது.

இலங்கை அணி, தற்போது நியூஸிலாந்து அணியுடன் டெஸ்ட் போட்டியில் விளையாடி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Sharing is caring!