இலங்கை அணி விளையாடும் போட்டிகளை பார்க்கும்போது வெட்கமளிக்கிறது

இலங்கை அணி விளையாடும் போட்டிகளை பார்க்கும்போது, ஒன்று கவலை அளிக்கிறது அல்லது வெட்கமளிக்கிறது என முன்னாள் நட்ச்சத்திர வீரர் ரொஷான் மஹாநாம தெரிவித்துள்ளார்.

ஆசிய கிண்ணக் கிரிக்கெட் தொடரில் இலங்கை அடைந்த தோல்வி தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும்போது அவர் இதனைக் குறிப்பிட்டார்.

இந்தப் போட்டிகளைப் பார்க்கும் சகல சந்தர்ப்பங்களிலும் ஒன்று நாம் கவலைப்படுகிறோம். அல்லது வெட்கப்படுகிறோம். ஆப்கானிஸ்தானிடம் தோல்வி அடைந்தோம் என்பதை என்னால் சிந்தித்துப் பார்க்கக்கூட முடியாமல் உள்ளது. வெற்றி தோல்வியை நாம் சமமாக ஏற்றுக்கொள்ள வேண்டும். ஆனால், இவர்கள் தோல்வி அடைந்த விதத்தை பத்திரிகைகளில் காணும் விதம், என்னால் தாங்கிக்கொள்ள முடியாதளவு வேதனையளிக்கிறது. நமது வீரர்களுக்கும் இந்த நிலைமை புரிய வேண்டும். அதனைவிட நிர்வாகிகளுக்கு புரிய வேண்டும்.

எமது இந்த விளையாட்டை இந்த நிலைமைக்கு கொண்டுசென்றமைக்கு அவர்கள் வெட்கப்பட வேண்டும். இது தொடர்பில் சகலரும் சிந்தித்து தாம் இதனைவிட சிறந்த பலனை கொடுக்க வேண்டும் என்பதை அவர்கள் உணர வேண்டும். மிகுந்த கவலையுடனும் வருத்தத்துடனும் நான் பேசுகின்றேன். ஏனென்றால், எமது குழுவில் 3 அணிகள் இடம்பெற்றன. இலங்கை அணி நாடு திரும்புகின்றமை வருத்தமளிக்கிறது என ரொஷான் மஹாநாம மேலும் தெரிவித்துள்ளார்.

Sharing is caring!