இலங்கை அணி 278 ஓட்டங்களால் வெற்றி

தென்னாபிரிக்க அணியுடனான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி 278 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது.

352 ஓட்டங்களை வெற்றியிலக்காகக்கொண்டு துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்கா 73 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக்கொண்டது.

டில்ருவன் பெரேரா 6 விக்கெட்களையும் ரங்கன ஹேரத் 3 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

தென்னாபிரிக்கா சார்பில் Vernon Philander பெற்ற 22 ஓட்டங்களே அணி சார்பில் பெற்றுக்கொண்ட அதிகபட்ச ஓட்டங்களாகும்.

காலி மைதானத்தில் நடைபெற்ற இந்த டெஸ்ட் போட்டி மூன்று நாட்களில் நிறைவுக்கு வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Sharing is caring!