இலங்கை – அவுஸ்திரேலிய இரண்டாவது 20 க்கு 20 இன்று

இலங்கை மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான இரண்டாவது சர்வதேச இருபதுக்கு 20 போட்டி இன்று (30) நடைபெறவுள்ளது.

பிரிஸ்பேர்னில் நடைபெறவுள்ள இந்தப் போட்டி இன்று பிற்பகல் 1. 40 மணியளவில் ஆரம்பமாகவுள்ளது.

3 போட்டிகள் கொண்ட இருபதுக்கு 20 தொடரில் 1 – 0 என அவுஸ்திரேலியா முன்னிலை பெற்றுள்ளது.

இந்நிலையில், இன்றைய போட்டியில் வெற்றியீட்டினால் மாத்திரமே இலங்கை அணியால் தொடரைத் தக்கவைத்துக் கொள்ள முடியும் என்ற நிலை காணப்படுகின்றது.

இன்றைய போட்டியில் கசுன் ராஜித்தவுக்கு பதிலாக இசுரு உதான விளையாடவுள்ளதாக இலங்கை கிரிக்கெட் தகவல்கள் தெரிவித்துள்ளன.

நட்சத்திர வேகப்பந்து வீச்சாளரான லசித் மாலிங்கவின் தலைமையின் கீழ் இறுதியாக விளையாடிய 8 இருபதுக்கு 20 போட்டிகளில் இலங்கை அணி 7 போட்டிகளில் தோல்வியடைந்துள்ளது.

நியூஸிலாந்துக்கு எதிராக கடந்த செப்டெம்பர் மாதம் நடைபெற்ற போட்டியில் லசித் மாலிங்க 4 பந்துகளில் 4 விக்கெட்களை வீழ்த்தியிருந்ததுடன், அந்தப் போட்டியில் மாத்திரமே இலங்கை அணி வெற்றியீட்டியிருந்தது.

இலங்கை அணி இறுதியாக அவுஸ்திரேலியாவில் விளையாடியுள்ள 3 இருபதுக்கு 20 தொடர்களையும் கைப்பற்றியுள்ளது.

இந்தப் போட்டி சிரச டிவியில் நேரடியாக ஒளிபரப்பப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Sharing is caring!