இலங்கை கிரிக்கெட்டில் அதிரடி மாற்றம்..!

இலங்கை கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் பதவியிலிருந்து சந்திக ஹதுருசிங்கவை நீக்கி இலங்கை கிரிக்கெட் சபை அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.

இலங்கை கிரிக்கெட் சபை நிறைவேற்றுக் குழுவின் அவசரக் கூட்டத்திலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டிருப்பதாக தெரியவருகிறது.

ஹதுருசிங்கவை குறித்த பதவியில் தொடர்ந்தும் வைத்திருக்கா வேண்டாம் என விளையாட்டு அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ விடுத்த உத்தரவுக்கு இணங்க, உடனடியாக குறித்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலகக் கிண்ண தொடரில் இலங்கை அணி சோபிக்க தவறியதை அடுத்து, வங்கதேச ஒரு நாள் தொடருக்குப் பின்னர், இலங்கை பயிற்சியாளர் குழுவை நீக்குமாறு விளையாட்டு அமைச்சரினால் கிரிக்கெட் நிறுவனத்திற்கு ஏற்கனவே குறித்த உத்தரவு விடுக்கப்பட்டிருந்தது.

ஆயினும், தற்போது இடம்பெறவுள்ள நியூசிலாந்துடனான போட்டி நிறைவடையும் வரை தற்போதுள்ள பயிற்சியாளர் குழு தொடர்ந்து பணியாற்ற அனுமதியை வழங்குமாறு கோரியிருந்தனர்.

எனினும், தற்போது தலைமை பயிற்சியாளரான ஹதுருசிங்க நீக்கப்பட்டுள்ளதுடன், அவரது இடத்திற்கு பதில் தலைமை பயிற்சியாளராக இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் தலைமை செயற்பாட்டு அதிகாரி ஜெரோம் ஜயரத்ன நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே இலங்கை கிரிக்கெட் சபை புதிய பயிற்சியாளரை நியமிக்க தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.

Sharing is caring!