இலங்கை கிரிக்கெட்டில் மீண்டும் உறுதியான யாழ்ப்பாணத் தமிழனின் வீரம்.!! வாயார வாழ்த்திய கிரிக்கெட் ஜாம்பவான்கள்.!!

இலங்கை கிரிக்கெட் சபையின் ஏற்பாட்டில் வெளிநாட்டு வீரர்களின் பங்கேற்புடன் மிகப் பிரமாண்டமான முறையில் லங்கா பிரிமியர் லீக் தொடர் நடைபெற்று வருகிறது.

நடைபெற்று வரும் லஙகா பிரீமியர் லீக் இருபதுக்கு இருபது தொடரில், ஜப்னா ஸ்டாலியன்ஸ் அணியில் கடந்த போட்டியில், யாழ்ப்பாணத்தை சேர்ந்த வீரரான விஜயகாந்த் வியாஸ்காந்த் முதல் யாழ்ப்பாண வீரராக விளையாடி இருந்தார்.

லங்கா பிரிமியர் லீக் டி20 தொடரில் ஜப்னா ஸ்டாலியன்ஸ் அணியில் 4 தமிழ் பேசும் வீரர்கள் இடம் பெற்றுள்ளார்கள்.இதில், கடந்த போட்டியில் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியைச் சேர்ந்த 19 வயதுடைய சுழற்பந்துவீச்சாளரான விஜயகாந்த் வியாஸ்காந்த் அறிமுகமாகிய அந்த போட்டியில் எல்லோர் கவனத்தையும் ஈர்த்தார். குறித்த வீரரின் உடைய பந்துவீச்சு பாணி மிக அழகாக அமைந்திருப்பதாக கிரிக்கெட் வர்ணனையாளர்கள் கூட, போட்டியின் போது தெரிவித்திருந்தார்கள்.

போட்டி முடிவடைந்ததன் பின்னர் ஸப்னா ஸ்டாலியன்ஸ் அணியினுடைய தலைமை பயிற்றுவிப்பாளர் திலின கண்டம்பி, அதே போன்று இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் அணித்தலைவர் அஞ்சலோ மெத்தியூஸ் அதேபோல ஜப்னா ஸ்டாலியன்ஸ் அணித்தலைவர் திஸர பெரேரா ஆகியோர் குறித்த இளம் வீரரை மிக அழகான முறையில், அவருடைய திறமையைப் பாராட்டி இருந்தார்கள்.

இந்நிலையில், இலங்கை கிரிக்கெட் அணியின் ஜாம்பவான்களான குமார் சங்கக்கார மற்றும் மஹேல ஜெயவர்தன ஆகியோரும் விஜயகாந்த் வியாஸ்காந்துக்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டுள்ளனர்.இதுவரையில் லங்கா பிரீமியர் லீக் தொடரில் நிறைய வீரர்கள் விளையாடி இருந்தாலும் கூட, இந்த யாழ்ப்பாணத்து தமிழ்பேசும் வீரரான விஜயகாந்த வியாஸ்காந்துக்கு கொடுக்கப்பட்ட கௌரவம் ஏனைய வீரர்களுக்கு கொடுக்கப்படவில்லை. இவருடைய பந்துவீச்சு பாணி முத்தைய முரளிதரனின் பந்துவீச்சை போன்று உள்ளதாக கிரிக்கெட் வர்ணணையாளர்கள் புகழ்பாடியுள்ளனர்.

சொல்லப்போனால், முன்னாள் கிரிக்கெட் வீரர்களான மஹேல ஜயவர்தன மற்றும் குமார் சங்கக்கார ஆகியோர் இதற்கு முன்னர் எந்த ஒரு வீரரையும் இந்த அளவில் வாழ்த்தியது இல்லை. இவர்கள் இருவரும் டுவிட்டர் மூலமாக வியாஸ்காந்தையும், யாழ்ப்பாண அணியையும் வாழ்த்தி உள்ளமை, எங்கே மிகவும் வைரலான ஒரு செய்தியாகப் பரவி வருகிறது.

Sharing is caring!