இலங்கை கிரிக்கெட் அணியின் தலைவரான லசித் மாலிங்க நியமிக்கப்பட்டுள்ளார்

நியூஸிலாந்திற்கு எதிரான சர்வதேச ஒருநாள் மற்றும் சர்வதேச இருபதுக்கு 20 போட்டிகளுக்கான இலங்கை கிரிக்கெட் அணியின் தலைவரான லசித் மாலிங்க நியமிக்கப்பட்டுள்ளார்.

நியூஸிலாந்திற்கு எதிராக விளையாடும் சர்வதேச ஒருநாள், சர்வதேச இருபதுக்கு 20 போட்டிகளுக்கான இலங்கை குழாம் இன்று அறிவிக்கப்பட்டது.

அணித்தலைவராக லசித் மாலிங்கவை நியமித்ததாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் விடுத்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உபதலைவராக நிரோஷன் திக்வெல்ல பெயரிடப்பட்டுள்ளார்.

அஞ்சலோ மெத்யூஸ், தனுஷ்க குணதிலக்க, தினேஷ் சந்திமால், தனஞ்சய டி சில்வா, தசுன் சானக்க, திசர பெரேரா, குசல் மென்டிஸ் ஆகியோர் 17 பேர் கொண்ட குழாத்தில் இடம்பெற்றுள்ளனர்.

குசல் ஜனித் பெரேரா, அசேல குணரத்ன, சீகுகே பிரசன்ன, கசுன் ரஜித, நுவன் பிரதீப், துஷ்மந்த சமீர, லக்ஷான் சந்தகேன், லஹிரு குமார ஆகியோரும் குழாத்தில் பெயரிடப்பட்டுள்ளனர்.

Sharing is caring!