இலங்கை கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளராக மாறும் மஹிந்தவின் சம்பந்தி…!!

நியூசிலாந்து அணியுடன் இலங்கை கிரிக்கட் அணி போதும் போட்டிகளுக்கு இலங்கை அணியின் தற்காலிக தலைமைப் பயிற்சியாளராக இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் தலைமை இயக்க அதிகாரி ஜெரம் லீ ஜயரத்னவை நியமிக்க தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

பாடசாலைக் காலத்தில் கொழும்பு புனித தாமஸ் கல்லூரியின் சிறந்த சகலதுறை கிரிக்கட் வீரராக திகழ்ந்த இவர் இலங்கை தேசிய அணியிலும் இடம்பிடித்தவர்.கிரிக்கட் விளையாட்டில் இருந்து ஓய்வுபெற்ற இவர் பயிற்சியாளராக தனது கிரிக்கட் வாழ்வை கொண்டு சென்று I. C C Level 4 qualified பயிற்சியாளராக தரம் பெற்றவர். முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் புதல்வர் ரோஹித்த ராஜபக்ச சில மாதங்களுக்கு முன்னர் திருமண பந்தத்தில் இணைந்தது, இவரின் ஒரே புதல்வியான டடானா லீ ஜயரத்னவுடன் என்பது குறிப்பிடத்தக்கது.

Sharing is caring!